மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்:

1023

மனைவியை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் கவட்ரா, இவர் மனைவி சோனியா, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சோனியா எப்போதும் மாடர்னாக உடையணிந்து, நவீன கலாச்சாரத்தை பின்பற்றி வந்துள்ளார்.இது சஞ்சய்க்கும் அவர் குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை. இது சம்மந்தமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதோடு வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று மீண்டும் சஞ்சய், சோனியா இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சஞ்சய் வீட்டிலிருந்த துப்பாக்கியால் மனைவியை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE