மோடி ஓவியம் வரைந்த இளம்பெண் வீட்டை விட்டு துரத்தியடிப்பு:

137

பிரதமர் மோடியின் ஓவியத்தை வரைந்த இளம்பெண்ணை கணவர் உள்ளிட்டோர் அடித்து வீட்டை விட்டு துரத்தினர். உத்தரப் பிரதேச மாநிலம், பசாரிக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நக்மா. இவருடைய கணவர் பர்வேஸ். இவர்களுக்கு கடந்தாண்டு தான் திருமணம் நடந்தது. நக்மா ஓவியம் வரைவதில் திறமைசாலி. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஓவியங்களை நக்மா வரைந்தார். இதை பார்த்து பர்வேஸ் ஆத்திரம் அடைந்தார். அவரும், அவருடைய குடும்பத்தினரும் நக்மாவை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர். இதனால், நக்மா தனது தாய் வீட்டுக்கு சென்றார். மாமியார் வீட்டில் நடந்த கொடுமையை தந்தை சாம்ஷெரிடம் கூறினார். புகாரின்பேரில், பர்வேஸ் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்–்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE