உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு சோகத்தில் டிடிவி தினகரன்:

252

சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பொதுக்குழுவுக்கு எதிராக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும்,அதிமுக பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்து எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
எனவே, இந்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நாளை பொதுக்குழு நடைபெற தடையில்லை என உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE