கடந்த ஓராண்டில் காஷ்மீர் மாநிலத்தில் நல்ல முன்னேற்றம்;

175

காஷ்மீர் மாநில நிலவரத்தில் கடந்த ஓராண்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு நான்கு நாள் சுற்றுப் பயணம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீஸ் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் கடந்த 3 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஸ்ரீநகரில் நேற்று அவர் அளித்த பேட்டி: காஷ்மீர் மாநில பிரச்னைக்கு 5 ‘சி’ அடிப்படையில்தான் நிரந்தர தீர்வு காண முடியும். அது, அன்பு, தொடர்பு, ஒன்று சேர்ந்து வாழ்வது, நம்பிக்கையை ஏற்படுத்துவது மற்றும் உறுதியாகும். பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம், காஷ்மீர் மாநில நிலவரத்தில் கடந்த ஓராண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. அதற்காக எல்லாமே நன்றாக இருப்பதாக கூற மாட்டேன். ஆனால், அவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மட்டும் மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் சொல்வேன்.

இம்மாநில பிரச்னைக்கு தீர்வு காண உதவி செய்ய முன்வரும் ஒவ்வொரிடமும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். அதற்கு அதிகாரப்பூர்வமற்ற அல்லது அதிகாரப்பூர்வ அழைப்பு வேண்டும் என்பெதல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். நான் இங்கு திறந்த மனதுடன் வந்திருக்கிறேன். அரசு யாரிடம் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறதோ, அவர்களில் ஒருவரை கூட விலக்கி வைக்க விரும்பவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE