சசிகலாவின் கணவர் கவலைக்கிடம்:

438

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் கணவரான நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்டது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு லண்டனைச் சேர்ந்த பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகம்மது ரீலா சென்னை வந்துள்ளதாகவும், ஓரிரு நாட்களுக்குள் கல்லீரல் மாற்று அறுவகை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடராஜனினுக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் அடைப்பு இருந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 மணி நேரத்திற்கு மேலாக டயாலிசிஸ் நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கணவரை பார்க்க சசிகலா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா பரோல் எதற்கும் விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE