பாகிஸ்தான் – உலக அணி இன்று மோதல் -பாதுகாப்பு அதிகரிப்பு

315

உலக பதினொருவர் அணிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திரக் கிண்ண 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறும்.

இதில் கலந்து கொள்வதற்காக உலக பதினொருவர் அணிக்கான 13 பேர் அடங்கிய குழாம் நேற்று பாகிஸ்தானை சென்றடைந்தது.

2009ம் ஆண்டு இலங்கைக் கிரிக்கட் அணி மீது லாஹுரில் வைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்துஇ பாகிஸ்தான் செல்வதற்கு சர்வதேச அணிகள் தயக்கம் காட்டி வந்தன.

தற்போது வேறுவேறு அணிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய இந்த குழாம் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில்இ அங்கு கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE