மியன்மாரில் இன சுத்திகரிப்பு – ஐக்கிய நாடுகள் சபை

187
United Nations High Commissioner for Human Rights Zeid Ra'ad Al Hussein delivers his statement during a ceremony for the victims of the shooting at the Paris offices of French weekly newspaper Charlie Hebdo at the United Nations in Geneva January 9, 2015. REUTERS/Denis Balibouse (SWITZERLAND - Tags: MEDIA CRIME LAW POLITICS SOCIETY)

மியன்மாரில் இன சுத்திகரிப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற துன்புறுத்தல்களானதுஇ இனச்சுத்திகரிப்புக்கு மிகச்சிறந்த உதாரணம் என்று அவர் குறிபபிட்டுள்ளார்.

இவ்வாறான துன்புறுத்தல்கள் காரணமாக மியன்மாரில் இருந்து சுமார் 3 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் வரையில் பங்களாதேஸிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை ரோஹிங்யா போராளிகளினால் நேற்று பிரகடனப்படுத்தப்பட் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மியன்மார் தெரிவித்துள்ளது.

மியன்மார் இராணுவம் இந்த காலப்பகுதியினில் தமது ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தீவிரவாதிகளுடன் மியன்மார் அரசாங்கம் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட தயாராக இல்லை என அரசாங்க பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE