ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நிலக்கண்ணி வெடிகளாலும் பாதிப்பு

197

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிக அளவில் நிலக்கண்ணி வெடிகளால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறுவதாக கூறப்படும் வன்முறைகளால் லட்சக் கணக்கானவர்கள் பங்களாதேஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் இராணுவத்தினரால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளில் சிக்கி அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் பங்களாதேஸில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுள் மியன்மாரில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஸிற்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எல்லைத்தாண்டு முஸ்லிம்களை இலக்கு வைத்து அதிகாரிகள் நிலக்கண்ணி வெடிகளைப் புதைப்பதாகஇ சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE