வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடை விதிக்கும் யோசனை – ஏகமனதாக நிறைவேற்றம்

187

வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடையை விதிக்கும் யோசனை ஐக்கிய நாடுகளில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் வடகொரியா தமது ஆறாவதும் மிகப்பெரியதுமான அணு குண்டை சோதனை செய்திருந்தது.

இதனை அடுத்து அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பொருளாதார தடை வரைவு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு உள்ளாக்கப்பட்டது.

இதன்போது சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 15 அங்கத்துவ நாடுகளும் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி வடகொரியாவின் நிலக்கரி கடலுணவு ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE