விஜய் ரசிகர்களால் படிப்பை பாதியில் கைவிட்டு ஆடு மேய்க்கும் மருத்துவ மாணவி

781

விஜய் ரசிகர் மன்றத்தினர் வாக்குறுதி அளித்த படி கல்வி கட்டணம் செலுத்ததால் மாணவி ஒருவர் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு ஆடு மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அரியலூரை சேர்ந்த ரங்கீலா என்ற மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். ஏழை குடும்பத்தை சேர்ந்த ரங்கீலா, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பள்ளி படிப்பை முடித்துள்ளார்.

இதனையடுத்து, கன்னியாகுமரியில் உள்ள ஆயர்வேத கல்லூரியில் ரங்கீலா சேர்ந்துள்ளார்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை தாங்கள் செலுத்துவதாக கல்லூரி நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமாக உறுதியளித்த கன்னியாகுமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர், வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளனர்.

இதனால், கல்லூரியிலிருந்து மாணவி ரங்கீலா நீக்கப்பட்டுள்ளார். கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட மாணவி ரங்கீலா, சொந்த ஊரில் ஆடுகளை மேய்த்தும் கூலி வேலை செய்தும் வருகிறார்.

மாணவியின் எதிர்காலம் விஜய் ரசிகர் மன்றத்தினரின் செயலால் கேள்வி குறியாகியுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE