உலக பதினொருவர் அணியை வென்றது பாகிஸ்தான் அணி

254

பாகிஸ்தான் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் சுதந்திரக் கிண்ணத் தொடரின் முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி நேற்றையதினம் லாஹுரில் நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.

பாபர் அசாம் 86 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

198 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஃபப் டு ப்ளசி தலைமையிலான உலக பதினொருவர் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE