ஊழல் மோசடிகளுக்கு எதிராக யாழிலும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு (படங்கள் இணைப்பு)

281

வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்று, சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும் தமது எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் வெளியிட்டனர்.

1:6 என்ற விகிதாசாரத்தில் 2015 ஆம் ஆண்டு சம்பள முரண்பாட்டிற்கு உடன் தீர்வு வை, மக்கள் பணத்தினைக் கொள்ளையிடும் ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை வழங்கு, இலங்கை மின்சார சபை என்.வி.கியு அடிமைச் சேவகத்தினை உடன் நிறுத்தி விடு, தொழிற்சங்க அடக்கு முறை மற்றும் பழி வாங்கல்களை உடன் நிறுத்து, இலங்கை மின்சார சபை ஊழியர் சேமலாப நிதிய நிதி மோசடியினை உடன் தீர்த்து வை, இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இடர் கொடுப்பனவொன்று உடன் வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவின் மீண்டும் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

– யாழ்ப்பாண நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE