எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது

167

எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 10 வீதத்தால் விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய எரிவாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE