ஐ.நா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஆங்சான் சூகி பங்கேற்க மாட்டார்

281

 

 

அமெரிக்காவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 முதல் 25 ஆஆம் திகதிவரை நியூயோர்க்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் ராகின் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறையின்போது மூன்று 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் பங்கதேஷுத்திற்கு தப்பி சென்றனர்.

ரோஹிங்யா முஸ்லிகளின் பிரச்சினையை கையாண்டமை தொடர்பாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூகி மீது விமர்சனங்கள் முனு;வைக்கப்பட்டு வருகின்றன.

ராகின் மாகாணத்தில் இடம்பெறும் மோசமான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் மியான்மார் அரசிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் செய்ட் ரா அல் ஹுசைனும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில்இ ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் ஆங் சான் சூகி கலந்து கொள்ளமாட்டார் அரசாங்க பேச்சாளரான ஜோவ் டே தெரிவித்துள்ளார்.

இதேவேள பல முக்கிய பிரச்சினைகளை ஆங் சான் சூச்சி சமாளிக்க வேண்டியிருப்பதால் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்லாமல் இருக்கலாம் மியான்மர் அரசாங்கத்தின் மற்றொரு பேச்சாளரான ஆங் சின் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE