கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

266

50 லட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிலோ கிராம் எடைகொண்ட கேரள கஞ்சாவுடன் ஒருவர் மாளிகாகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அவர் கைதானார்.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட குறித்த போதைப் பொருள், கற்பிட்டி ஊடாக கொழும்புக்கு கடத்திவரப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படுகிறது.

அதேநேரம் வத்தளை ஏக்கித்த பகுதியில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE