கோழி இறைச்சி கறிக்குள் ஹேரோயின்:யாழ் சிறைச்சாலைக்குள் சம்பவம்

582

 

யாழ் சிறைச்சாலைக்குள்

நேற்று சிறைச்சாலைக்குள் கோழிக்கறியினுள் ஹெரோயின் கடத்த முற்பட்ட நபரொருவர் சிறைக்காவலர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் இருக்கும் கைதியொருவரை பார்ப்பதற்காக வந்த நபரொருவர் கொண்டு வந்திருந்த கோழிக்கறியினுள்ளேயே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபரை பொலிசார் இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE