மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம் (படங்கள் இணைப்பு)

245

சர்வதேச உளநல தினம் 2017 ஒக்டோபர் 10 திகதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் ‘மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம்’ என்ற மகுட வாசகத்தின் கீழ் இது அனுஸ்டிக்கப்படுகின்றது. வவுனியா விபுலாந்தாக் கல்லூரியில் ஒருமாத காலத்திற்கு இத்தினத்தை முன்னிட்டு உளவள நடவடிக்கைகள் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் அதிபர் சுப்பையா அமிர்தலிங்கத்தின் தலைமையில் உளநல செயற்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் சிறப்புரையை ‘மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம்’ என்ற தலைப்பில் வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் அதிபர் – ஆசிரியர் – மாணவர்கள் மனம் விட்டுப் பேசுவதால் மன இறுக்கமின்றி பேசும் வாய்ப்பு கிடைப்பதுடன் நல்ல உறவுகளைப் பேணி மாணவர்களுக்கு வழி காட்டியாக அமைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களை விட தமக்கு வழிகாட்டியாக அமைந்த ஆசிரியர்களே மாணவர்கள் மனதில் பெரிதும் இடம்பிடித்துள்ளனர் என்பதால் ஆசிரிய – மாணவ இடைவெளிகள் குறைக்கப்பட்டு மாணவர்கள் மனம் விட்டு பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும், எனக்குறிப்பிட்டார்.
அதிபர் தனது உரையில் இத்தினத்தில் எமது பாடசாலை உளநலக்குழுவினர் எடுத்த முயற்சியைப் பாராட்டிப்பேசியதுடன் பொறுப்பாசிரியர் திருமதி யசோதரனுக்கும் சிறப்புரை ஆற்றிய மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தருக்கும் நன்றிகளைத்தெரிவித்து பாடசாலை மாணவர்கள் தமது பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவதுடன் தம்மிடையே பாராட்டுதல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனத்தெரிவித்தார்.

– வவுனியா நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE