முதுரை பலகைகளுடன் குளிரூட்டப்பட்ட மீன் ஏற்றும் வாகன சாரதி கைது (படங்கள் இணைப்பு)

928

மீன் ஏற்றும் குளிரூட்டப்பட்ட வாகனத்தில் மறைத்து முதுரை பலகைகளை ஏற்றி வந்த வாகனத்துடன் பலகையையும், சாரதியையும் செவ்வாய்கிழமை இரவு வாழைச்சேனை – கறுவாக்கேணி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாழைச்சேனை வன இலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

குறித்த மீன் ஏற்றும் குளர்சாதன வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து செவ்வாய்கிழமை இரவு வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் குறித்த வாகனத்தை பரிசோதனைக்காக இடைமறித்த போது நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்திச் சென்று இடைமறித்த போது அதில் சட்ட விரோத முதுரை பலகைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்து அடி நீளம் கொண்ட முதிரை பலகைகள் நூற்றி ஐம்பது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மீறாவோடையில் உள்ள மரம் அறியும் ஆலையில் இருந்து வாழைச்சேனை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக கொண்டுவரப்பட்ட பலகைகள் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை வன இலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வன இலகா பிரிவில் உள்ள மர ஆலைகளில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படும் சம்பவம் இடம்பெறுவதால் வனஇலகா அதிகாரிகள் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுவதாகவும், சட்டவிரோத மரங்களை பலகைக்காக அறுக்கும் ஆலைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை வனஇலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.

– மட்டக்களப்பு நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE