விஜய் பற்றி தவறாக வெளியே கிளப்பி விடுகிறார்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்

511

தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.

இந்நிலையில் இவரை பற்றி வெளியே எப்போதும் விஜய் படப்பிடிப்பில் பேசமாட்டார், மிகவும் அமைதியானவர் என்று கூறிவருவார்கள்.

இதை நம்பி தான் வேலாயுதம் படப்பிடிப்பில் ‘லொல்லு சபா’ புகழ் சுவாமிநாதன் விஜய்யிடம் பேசவே இல்லையாம்.

பிறகு ஒருநாள் விஜய் எதிரில் வர சுவாமிநாதன் வணக்கம் வைக்க ‘அண்ணா எப்படி இருக்கீங்க, உங்க காமெடி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று கூற சுவாமிநாதன் ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தாராம்.

அதுமட்டுமின்றி ’இப்படித்தான் விஜய் யாரிடமும் பேச மாட்டார் என அவரை பற்றி தவறாக வெளியே கிளப்பிவிடுகிறார்கள் போல’ என்று மனதில் நினைத்துக்கொண்டாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE