விநாயகரை இழிவுப் படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவின் விளம்பரப் படத்திற்கு இந்தியா எதிர்ப்பு

41

இந்து மதக் கடவுளான விநாயகரை இழிவுப் படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவில் தயாரித்து வெளியிடப்பட்ட விளம்பரப் படம் ஒன்று தொடர்பில் இந்தியா ராஜதந்திர ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இறைச்சி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றிற்கான இந்த விளம்பரத்தில் இந்துக் கடவுளான விநாயகர் உட்பட ஏனைய பல்வேறு மதங்களின் கடவுள்கள் மற்றும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுகின்றவர்களையும் பிரதிபலிக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் விநாயகர் இறைச்சி உண்பதைப் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை தடை செய்யுமாறு இந்தியா அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE