வீதிக்கு வந்த யானைகளால் நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில்பயணிகள் அசௌகரியம்

260

 

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக பயணித்தோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று மாலை 4.30 மணிமுதல் மாலை 5.20 வரை அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சத்துடனேயே பலரும் பயணங்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதுடன் தற்போது மாலை வேளைகளில் அப்பகுதியில் அடிக்கடி யானைகள் வந்து செல்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

-வவுனியா  நிருபர்-

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE