100 கோடி பாம்பு விஷம் பறிமுதல்

242

மேற்குவங்க மாநிலத்தில் சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் ரூ.100 கோடி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் நேற்று காலை சிஐடி போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் இணைந்து ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 3 ஜார்களில் கொடிய பாம்பு விஷம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட பாம்பு விஷத்தின் மதிப்பு ரூ.100 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். தீவிரவாதிகள் சயனைட் குப்பியை தயாரிக்க இந்த விஷத்தைதான் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE