11 ஆண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி பெண்:

402

தாய்லாந்தை சேர்ந்த ஜரியா போன் என்ற பெண் கடந்த மாதத்தில் மட்டும் 4 திருமணங்களை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் அவரது புகைபடத்தை பதிவிட்டு ஒரு ஆணுடன் நண்பராகி பழகி வருகிறார். பின்னர் அந்த நபரிடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி சம்மதிக்க வைக்கிறார்.

தாய்லாந்து வழக்கப்படி திருமணப் பெண்ணுக்கு தர வேண்டிய வரதட்சணை தருமாறு சில லட்சங்களை வாங்கிய பின்னர் அவர்களை ஜாதகம் சரியில்லை என்று கூறி கல்யாணத்தை நிறுத்திவிடுகிறார்.

இதேபோல் இவர் 11 ஆண்களை ஏமாற்றி 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை வரதட்சனையாக பெற்றுள்ளார்.

சமீபத்தில் பிரசான் தியாம்யாம் என்ற நபரை ஏமாற்ற முயன்ற போது பொலிஸில் சீக்கியுள்ளார். அப்போது தான் பழங்கள் விற்பனை நிறுவனம் தொடங்க உள்ளதாகவும் அதற்காக தன்னுடன் பழகிய நபர்கள் பங்குதாரர்கள் ஆவதற்காக விரும்பி பணங்களை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE