2 ஆயிரம் ரூபா பணத்திற்காக உயிரோடு எரிக்கப்பட்ட பெண்

535

கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த சவுகான் – பூஜா தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்ற நாள் முதலே தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டில் இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை காணவில்லை என்று தனது மனைவியுடன் சவுகான் சண்டையிட்டுள்ளார்.
இதில், மாமியாரும் சேர்ந்துகொண்டு நீதான் பணத்தை எடுத்துள்ளாய் என கூறியுள்ளார். பிரச்சனை அதிகமாகவே கணவரும், மாமியாரும் சேர்ந்து பூஜாவின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துள்ளனர்.

இதில், வலி தாங்க முடியாமல் பூஜா அலறியதை கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்துள்ளனர். இதற்கிடையில் சவுகானும் அவரது தாயாரும் வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளனர்.

அருகில் வசிப்பவர்களே பூஜாவை மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி பூஜா உயிரிழந்தார்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த தாராசிங், கோமளா பாயை கமலாபுரா பொலிசார் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE