அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்: வடகொரியா எடுத்த சபதம்

575

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. 6–வது முறையாக கடந்த 3–ஆம் திகதி அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது,எதிர்ப்பின்றி நிறைவேறியது.

இந்த புதிய பொருளாதார தடைகள் காரணமாக வடகொரியாவுக்கு ரூ.7,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இது வடகொரியாவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வடகொரியா நாட்டின் அணு ஆயுத திட்டத்தை முடுக்கி விட சபதம் செய்துள்ளது.

அது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் முயற்சியால் மேலும் ஒரு சட்டவிரோத, தீய பொருளாதார தடை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும், இருப்பு உரிமையை நிலைநாட்டவும் தனது வலுவை வடகொரியா இரட்டிப்பாக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகொரியாவின் செயல்கள் நியாயமானதே என்று தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE