அமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவுள்ளது.

191

அமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஹார்வி, ஏர்மா ஆகிய சூறாவளிகள் அமெரிக்காவையும், அட்லாண்டிக்கில் உள்ள தீவுகளையும் கடுமையாக தாக்கி இருந்தன.

தற்போது ஹொசே என்ற சூறாவளி உருவாகியுள்ளதுடன், இது பஹாமாஸ் தீவுகளை தாக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது ஏனைய சூறாவளிகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் வலுகுறைந்ததாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் ஏர்மா சூறாவளியின் தாக்கத்தால் மின்சார தடை நிலவிய வைத்தியசாலை ஒன்றில் 8 பேர் பலியாகினர்.

அத்துடன் மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்ளோரிடாவின் ஹொலிவுட் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மின்சாரத் தடை ஏற்பட்டதன் காரணமாக, நாள் முழுவதும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா, ஜோர்ஜியா, கெரொலினா பகுதிகளில் ஏர்மா சூறாவளி கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் 10 மில்லியன் மக்கள் இன்னும் மின்சார விநியோம் அற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிபியன் தீவுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த சூறாவளியால் 40 பேர் வரையில் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE