இரண்டாவது போட்டியில் உலக பதினொருவர் அணிக்கும் வெற்றி[ படங்கள் இணைப்பு]

314

 

உலக பதினொருவர் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் உலக பதினொருவர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணிக்காக அதிகபட்சமாக பாபர் அசம் 45 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலளித்தாடிய உலக பதினொருவர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் ஹசீம் அம்லா 72 ஓட்டங்களையும் இலங்கை அணியின் திஸ்ஸர பேரேரா 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 47 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று கொடுத்தனர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக பந்து வீச்சிலும் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்திய திஸ்ஸர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தொடரின் 3வதும் இறுதியுமான போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE