இலங்கையில் இன்று பல பகுதிகளுக்கு மழை 

131

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக குக்குலே கங்கை நீர்தேக்கத்தின் சகல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த நீர் தேக்கத்தின் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் இரத்தினப்புரி, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE