ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டவும் – சம்பந்தனிடம் ஈபிஆர்எல்எப் கோரிக்கை

115

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு எதிக்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிடம் ஈ .பீ. ஆர்.எல்.எப் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தினை அக் கட்சியின் சார்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடித்த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நாடாளுமன்ற குழு கூட்டம் தொடர்பான உங்களது அறிவித்தல் கடிதம் கிடைத்தது. அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம்தொடர்பாகவும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய அரசியல் யாப்பு வரவிருக்கின்ற சூழலில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் 20ஆவது திருத்தம் மற்றும் வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை ஆகியவை கொள்கை முடிவுடன் தொடர்புபட்டிருப்பதால் நாடாளுமன்ற குழு கூட்டம் கூடுவதற்குமுன்பாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைக் கூட்டி அங்கத்துவக்கட்சிகளின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எட்டப்படுகின்ற முடிவுகளுக்கேற்ப நாடாளுமன்ற குழுவைக் கூட்டி அனைவரும் ஒருநிலைப்பாட்டிற்கு வருவதே சரியானதாகவும் சிறந்த ஜனநாயக செயல்முறையாகவும் இருக்கும். ஆகவே தாங்கள் விரைவாகஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோருகிறது.

எமது கோரிக்கையை ஏற்று செயற்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– வவுனியா நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE