கடல்களில் புதிய வடிவிலான மீன்வளர்ப்புத் திட்டம்

206

கடலில் கூண்டுகளினுள் மீன் வளர்ப்புத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டார்.
திருகோணமலை கொட்டியார் பிரதேசத்தின் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உட்பட்ட தேசிய கடற்கரையோர பகுதியில் 150 ஹெக்டேயர் நிலப்பரப்பு பிரதேசத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்காக இந்த கடற்பிரதேசத்தை குளோபல் சிலோன் சீபூட் (தனியார்) நிறுவனத்திற்கு 30 வருட குத்தகைக்கு வழங்குவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்காவில் கொன்டினென்டனல் சிலோன் சீ பூட் (தனியார்) நிறுவனம் மற்றும் நோர்வே அரசாங்கத்தின் கொன்டினென்டனல் சிலோன் சீ பூட் ஏ.எஸ் நிறுவனத்துடன் (தனியார்) இணைந்து குளோபல் சிலோன் சீபூட் நிறுவனம் பகிரங்க கடற்பகுதியில் மீன்கூண்டு மீன் வளர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. வர்த்தக ரீதியிலான கேள்விகளைக் கொண்ட மீன்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. இந்த மீன்வகைகளை உற்பத்தி செய்வதே இந்த உத்தேச திட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE