கமநலசேவை உத்தியோகத்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி

89

மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச்சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு இன்று மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் உரமானிய பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் உரமானியத்தினை பணமாக கொடுக்கும் நடைமுறைக்குரிய கணனிப்பயிற்சி நெறியில்வ டமாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.

இப்பயிற்சி நெறியில் தேசிய உரமானிய செயலகத்தை சேர்ந்த உதவிப்பணிப்பாளர் கபில திசநாயக்கா மற்றும் தேசிய உரமானிய செயலகத்தின் வவுனிய மாவட்ட உதவிப்பணிப்பாளர் விஜயவர்த்தன போன்றோர் கலந்து கொண்டதுடன் கொழும்பு பல்கலைகழக கணனி மென்பொருள் பொறியியலாளர் திலீப் வளவாளராகவும் கலந்து கொண்டார்.

– கிளிநொச்சி நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE