ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – மீளாய்வு அறிக்கை ஜனவரி

138

இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதனை ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை ஆய்வுக்குட்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிச்சலுகையை பெறும் ஏனைய நாடுகளின் தகவல்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட அதிகாரிகளை கொண்ட குழு 10 நாட்களாக இலங்கையில் ஆய்வுகளை நடத்தி குறித்த அறிக்கைக்கான தகவல்களை வழங்கியிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் தன்மை மேம்படுத்தல் நடவடிக்கையின் பொருட்டு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அந்த குழு பாராட்டியிருந்தது.

எவ்வாறாயினும் மறுசீரமைக்கப்பட வேண்டிய ஏனைய பல துறைகள் இலங்கையில் உள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.
– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE