ஜேர்மன் கலைஞர்களின் கின்னஸ் சாதனை

203

உலகின் மிக உயரமான மணல் கோட்டையை கட்டி ஜேர்மன் மணல் சிற்ப கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா நிறுவனமான Schauinsland-Reisen GmbH, Duisburg நகரில் மணல் சிற்பம் ஒன்றை அமைக்க முடிவு செய்தது.

விளம்பரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மணல் சிற்பக் கலைஞர்கள் 16.68 மீற்றர் உயரம் கொண்ட கோட்டையை கட்டியுள்ளனர்.
சுமார் 3500 டன் எடை கொண்ட இந்த மணல் கோட்டையை ஆய்வு செய்த அதிகாரிகள் கின்னஸ் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதன்மூலம் உலக அமைதியை வலியுறுத்தி சுதர்சன் பட்நாயக் என்பவரால் அமைக்கப்பட்ட 14.84 உயர மணல் கோட்டையின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE