நண்பனை கொன்று புதைத்த நண்பர்கள்

822

சென்னையில் மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொன்று புதைத்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவொற்றியூரை சேர்ந்த அவினாஷ்பூசன் என்பவரை காணவில்லை என்று அவரது தந்தை அஜய்குமார் பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், அஜய்குமாரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்மக்குரல், ‘உங்கள் மகனை உயிரோடு பார்க்க வேண்டுமென்றால், ரூபாய் 50 லட்சத்துடன் நாங்கள் சொல்கிற இடத்துக்கு வர வேண்டும்’ என்று மிரட்டிவிட்டு, சில நிமிடங்களில் மீண்டும் போன் செய்வதாகச் சொல்லி, செல்போன் இணைப்பைத் துண்டித்தது.
இதனால், விசாரணையை துரித்தப்படுத்திய பொலிசாரிடம், என் மகனின் நண்பர்கள் என சிலரை பொலிசில் அடையாளம் காட்டியுள்ளார்.

வினாஷ்பூசனின் நண்பர்கள் வெங்கடேசன், ரமேஷ், சூர்யா, தினேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மது விருந்து தகராறில் அவினாஷ்பூசனைக் கொன்று, சடையங்குப்பம் கடற்கரைப் பகுதியில் புதைத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொலிசார் எப்படியும் நம்மைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பயம் வந்துவிட்டதால், சடலத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிடலாம் என்று மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பி வந்தபோதுதான், பொலிசில் சிக்கிக்கொண்டோம் என்று வாக்குமூலத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE