பிரான்சில் பொதுமக்களை கண்மூடித்தனமான தாக்கிய நபர்:

296

பிரான்சில் பொதுமக்கள் மீது மர்மநபர் ஒருவர் கண்மூடித்தனமாக கைகளை வைத்து குத்தியதில் பொலிசார் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரான்சின் Toulouse பகுதியில் உள்ள city centre-ல் பொதுமக்கள் பலர் இருந்த போது, திடீரென்று வந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளான். இதைக் கண்ட பொலிசார் தடுக்க வந்த போது பொலிசாரையும் அந்த நபர் தாக்கியுள்ளான்.

இதனால் பொலிசார் மூன்று பேர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அப்போது பொலிசார் அவரை கீழே தள்ளி விட்டு கைது செய்த போது, அந்த நபர் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஒரு மனவளர்ச்சி குன்றியவர் என்றும், கடந்த ஏப்ரல் மாதம் தான் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் கூறுகையில், நாங்கள் ஷாப்பிங் செண்டரில் உட்கார்ந்து இருந்த போது, திடீரென்று வந்த அந்த நபர் முதலில் தனது மகனை தாக்கினான், அதன் பின் அவன் தனது மகளை தாக்கினான், இதனால் நாங்கள் உடனடியாக அங்கிருந்து ஓட்டம் எடுத்ததாக கூறியுள்ளார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE