‘மருதமௌலி’ நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும் (படங்கள் இணைப்பு)

170

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள விநாயகபுரம் கிராமத்தின் இயங்கிவரும் மு\விநாயகபுரம் அ.த.க பாடசாலையின் உடைய வரலாற்றை கூறும் ‘மருதமௌலி’ நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி.இ.கலைவாணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்களான திருமதி.சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் துணுக்காய் உதவி வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்

– தென்மராட்சி நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE