மருத்துவ சங்கத்திற்கு ஆதரவாக டக்ளஸ்

150

மருத்துவ சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைள் தொடர்பில் இழுத்தடிப்பு போக்குடன் செயற்படாது, சுமுகமான முறையில் அதனை தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களது பணிப் பகிஷ்கரிப்புகள் காரணமாக நோயாளர்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.
இந்தநிலைமை தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை ஆபத்தான நிலைமைகளை தோற்றுவிக்கப்படுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE