மாற்றுத்திறனாளிகளுக்கு ஆற்றிய சேவைக்காக நினைவுச் சின்னம் வழங்கல் (படங்கள் இணைப்பு)

234

கமிட் நிறுவன திட்டப் பணிப்பாளர் கந்தவேள் காண்டீபன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் ஆற்றிய சேவைக்காக தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் தலைவர் சட்டத்தரணி யூ.ஆர்.ரொட்ரிகோ விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டம் சந்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூகசேவைப் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விலேயே கந்தவேள் காண்டீபனை கௌரவித்து குறித்த கௌரவம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, சிரேஸ்ட சமூகசேவை உத்தியோகத்தர் அலியார், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

– மட்டக்களப்பு நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE