மீண்டும் சிறை விதிகளை மீறிய சசிகலா: என்ன செய்தார்?

255

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீண்டும் சிறை விதிகளை மீறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் டிஐஜி ரூபா அறிக்கை அளித்தார்.

இதோடு, சசிகலா சிறையில் சாதாரண உடையில் வெளியில் சென்று விட்டு மீண்டும் சிறைக்கு வந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது சசிகலா தரப்பினா் மீண்டும் சிறை விதிகளை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது, கைதியை ஒரு நாளில் ஆறு பார்வையாளர்கள் வரை தான் சந்திக்க முடியும். அதுவும் உறவினர்களாக தான் இருக்க வேண்டும்.

ஆனால், யூலை 11ம் திகதி சசிகலாவை ஏழு பேர் சந்தித்த நிலையில் அவர்களில் மூவர் மட்டுமே அவரின் உறவினர்கள் ஆவார்கள்.

இதற்கு முன்னர் யூலை 5ஆம் திகதி சசிகலாவை ஆறு பேர் சந்தித்த நிலையில் அதில் இருவர் மட்டுமே அவரின் உறவினார்கள்.

15 நாட்களுக்கு ஒரு முறை தான் கைதியை ஒருவர் சந்திக்க முடியும் என சட்டம் இருக்கும் நிலையில் சசிகலாவை ஒரு வார இடைவெளியில் இருமுறை ஆட்கள் சந்தித்துள்ளனர்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE