யாழில் ஹயஸ் வாகனம் விபத்து: ஒருவர் பலி

1672

ஹயல் வாகனம் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதி யாழ்.கச்சேரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் யாழ்.மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த நவராசா(வயது 67) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
வானில் இறந்த ஒருவரின் சடலத்தினை வவுனியாவிற்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே நித்திரைத் தூக்கத்தில் மதுபானசாலைக்கு முன்பாக உள்ள வீட்டு மதிலுடன் வாகனத்தை மோதியுள்ளார்.
மோதிய வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
– யாழ்ப்பாண நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE