யாழ். கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு

180

வடக்கு மாகாண சபையே! மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்று. மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து, கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த 12.07.2017 புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்ற மக்களுக்குத் தீர்வை வழங்கக்கோரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை மு.ப. 10 மணியளவில் யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்களால் பல்வேறு சுற்றுச்சூழல், சுகாதார மற்றும் உளவியற் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் ஏனைய அமைப்புக்களுடனும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இக் கவனயீர்ப்புக்கு ஆதரவு வழங்குமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற் சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கேட்டுக்கொள்கின்றது.

– யாழ்ப்பாண நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE