ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவ செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துக – ஐ.நா

194

 

மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் நடத்தப்படும் இராணுவ செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்போதும் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறவில்லை என்று இராணுவம் தெரிவித்து வருகிறது.

ஆனால் அதிக அளவில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதக் காலத்தில் மியன்மாரில் இருந்து 3லட்சத்து 79 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஸிற்கு தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE