‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு’ வரை நூல் அறிமுக நிகழ்வு

533

புதிய நீதி வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் சி.கா.செந்திவேல் எழுதிய வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை எனும் அரசியல் பகுப்பாய்வு விமர்சன நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 17
ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4 மணியளவில் புத்தூர் மேற்கில் அமைந்துள்ள கலைமதி மக்கள் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கா. செல்வம் கதிர்காமநாதனின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் வரவேற்புரையை திருமதி லதா உதயதீபனும், நூல் அறிமுக உரையைச் சட்டத்தரணி சோ. தேவராஜாவும், நூல் மதிப்பீட்டு உரைகளை எழுத்தாளர் க. தணிகாசலம், த. நவதாஸன் ஆகியோரும் நூலாசிரியர் பதிலுரையை தோழர் சி. கா. செந்திவேலும் நன்றியுரையை கி. வாகீசனும் ஆற்றவுள்ளனர். நிகழ்ச்சித் தொகுப்பை அ. இராஜசேகரம் மேற்கொள்ளவுள்ளார். இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்துள்ளனர்.

– யாழ்ப்பாண நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE