தமது அரசியல் கட்சிக்கு புதிய இளம் முகங்கள் – கமல்ஹாசன்

569

தமது அரசியல் கட்சிக்கு புதிய இளம் முகங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியல் பிரவேசம் தொடர்பில் கமல்ஹாசன் தமது ரசிகர்களிடம் ஊக்குவிப்புக்களை பெற்று வருவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அவர் இன்றைய தினம் சென்னையில் உள்ள தமது அலுவலகத்தில் தமது ரசிகர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதிகளவான மக்களை திரட்டுவதன் மூலம் நிதியை திரட்டி அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

எனினும் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படாதுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE