துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த இரதோற்சவம்

402

யாழ். வடமராட்சி துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம் இன்று பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது

வடக்கிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாக அறியப்படும் வடமராட்சி துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 20ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி திருவிழா இடம்பெற்றுவந்தது

திருவிழாவின் 14ம் நாளான நேற்றுமாலை சப்பறத்திருவிழா இடம்பெற்று இன்று காலை தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது

காலை எட்டு மணியளவில் ஆலயப்பிரதமகுரு தலைமையில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து விஷ்ணு பகவானுக்கு விசேட தீபாராதனைகளும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஸ்ணுபகவான் ஆலயத்தின் உள்வீதியுலா வருகை தந்தார்

அதையடுத்து ஆலயத்திடலில் திரண்டிருந்த பக்தர்களிற்கு ஆசி வழங்கியபடி வெளி வீதியுலா வருகைதந்த விஷ்ணுபகவான் 10 மணியளவில் தேரில் ஆரோகணித்து வெளிவீதியுலாவின் போது மக்களுக்கு காட்சியளித்தார்.

வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நிகழ்வைக்கண்டு பெருமாளின் அருளைப்பெற்றுக்கொள்ள நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆடியார்கள் ஆயலத்தில் திரண்டிருந்தனர்

அடியவர்கள் தீச்சட்டிகள், காவடிகள் பிரதட்டைகளை எடுத்து தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்

இத்திருவிழாவின் சிறப்பம்சமான சமுத்திரத்தீர்த்தோற்சவம் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– யாழ் நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE