கொழுப்பைக் குறைக்கும் திராட்சை

518

கருப்பு, பச்சை ஆகிய இருவகை திராட்சைகளில் தித்திப்பு மிக்க பச்சை நிற திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

பச்சை திராட்சை சாப்பிடுவதன் நன்மைகள்
  • பச்சை திராட்சையில் உள்ள Pterostilbene எனும் உட்பொருள் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • திராட்சையில் உள்ள  இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்றவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
  • நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடி, தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • பச்சை திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுப்பதுடன், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • நம் உடலின் நீர்ச்சத்து மற்றும் ரத்தத்தில் அமிலத்தின் அளவு மற்றும் தசைகளின் செயல்பாட்டினை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE