பெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா? இதோ

1234

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள்.பலன் கிடைக்கும்.

குப்பை மேனி :

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

கடலை மாவு மற்றும் தயிர் : கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும்.

இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

எலுமிச்சை :

எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE