ராஞ்சியில் சாதிக்குமா? இந்தியா அணி

410

இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

ஒரு நாள் தொடரில் அவுஸ்திரேலியாவை புரட்டியெடுத்த இந்திய அணியினர் தங்களது ஆதிக்கத்தை தொடர்வதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

ஒரு நாள் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த ரோகித் சர்மா (296 ஓட்டங்கள்), சகலதுறையிலும் ஜொலித்து தொடர்நாயகன் விருதை பெற்ற ஹர்திக் பாண்ட்யா, சுழலில் மிரட்டிய குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் 20 ஓவர் போட்டியிலும் அசத்துவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் அடைந்த தோல்விகளுக்கு பரிகாரம் தேடுவதற்கு முனைப்பு காட்டும்.

அந்த அணி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது.

ஆனால் 20 ஓவர் போட்டிக்கு என்று 5 வீரர்கள் வருகை தந்திருப்பதால் மோசமான நிலைமையை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.

20 ஓவர் அணிகளின் தரவரிசையில் இந்தியா 5-வது இடத்திலும், அவுஸ்திரேலியா 7-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி அவுஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால், தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறும். இதே முடிவு அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்தால் அந்த அணி 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE