ராஞ்சி டி20 கிரிக்கெட்- இந்தியா வெற்றி

523

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதனையடுத்து வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புனேஸ்வர் குமார் வீசினார். 3-வது மற்றும் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வார்னர், 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார்.

அடுத்து பிஞ்ச் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். 3-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் பிஞ்ச் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விரட்டினார்.

6-வது ஓவரை பாண்டியா வீசினார். இந்த ஓவரின் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரியும், பிஞ்ச் ஒரு பவுண்டரியும் விளாசினர்.

7-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த மேக்ஸ்வெல், அடுத்த பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல்லை இத்துடன் நான்காவது முறையாக சாஹல் வெளியேற்றியுள்ளார்.

மறுமுனையில் விளையாடிய ஆரோன் பிஞ்ச் குல்தீப் யாதவின் 10-வது ஓவரின் 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார். பிஞ்ச் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ஓட்டங்கள் சேர்த்தார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE