ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி – கார்த்தி அறிவிப்பு

479

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பின்னர் பொருளாளர் கார்த்தி பேசும்போது, ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம்.
இதற்காக கமல், ரஜினியிடன் ஒப்புதல் பெற்றுள்ளோம். அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும்’ என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE